டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் கேரளாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டாலும் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன. இரவுக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் மோகன்லால் கூட தனது த்ரிஷ்யம்-2 படத்தை ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் செய்தார். இந்தநிலையில் நேற்று முதல் (மார்ச்-11) இரவுக்காட்சியையும் சேர்த்து நான்கு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து நேற்று முதல் படமாக மம்முட்டி நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் தியேட்டர்களில் வெளியானது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து, தியேட்டர் அதிபர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கும் விதமாக பல இடங்களில் பல காட்சிகளுக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நிறைய பார்க்க முடிந்தது.
மர்ம த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முதன்முதலாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்பதும் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.




