பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

இன்றைய தேதியில் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இன்னொருவர் டொவினோ தாமஸ். இதில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம், கடுவா, ஜனகனமன, கோல்டு கேஸ், குருதி என கைநிறைய படங்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது தீர்ப்பு என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தி தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. திலீப்-சித்தார்த் நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார். அந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் முரளி கோபி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.. அதுமட்டுமல்ல, பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..




