ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. கடந்த மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரின் தோழை பிடித்து அழுத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேஷ் கோபிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த சுரேஷ் கோபி, “தவறான எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. அவர் என் மகளை போன்றவர். நான் செல்வதற்கு வசதியாக அவரை தொட்டு விலக்கி விட்டேன். அது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
ஆனாலும் அந்த பெண் பத்திரிகையாளர் கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதியன்று புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தன்னிடம் சுரேஷ் கோபி தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார். மேலும் இந்த புகார் தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் சமர்ப்பித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர், பெண் பத்திரிகையாளர் புகாரை நடக்காவு போலீசாருக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த சுரேஷ் கோபி போலீசார் முன்பு வருகிற 18ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.