இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்கள் அவரது கைவசம் உள்ளன.
அதே சமயம் இந்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா கிளம்பி சென்றார் பிரபாஸ். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸுக்கு அங்கே முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். விமான நிலையத்தில் இருந்து தனது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி தனி ஆளாக அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.




