மஞ்சு வாரியர் பட இயக்குனர் மும்பை விமான நிலையத்தில் கைது | அடுத்தடுத்து வெளியாகும் ‛இட்லி கடை' பட நடிகர்களின் கேரக்டர் போஸ்டர் : செப்., 14ல் இசை வெளியீடு | காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழக தியேட்டர் உரிமம் இத்தனை கோடியா? | தனுஷ் முதுகில் குத்த விரும்பாத ஜி.வி.பிரகாஷ் | 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்! | கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் ரசிகர்கள்: தேஜூ அஸ்வினி | 'குட் பேட் அக்லி - ஓடிடி தளத்தில் இன்னும் நீக்கப்படாத இளையராஜா பாடல்கள் | 200 கோடியை நெருங்கும் 'லோகா' | தனுசின் அடுத்த பட இயக்குனர்: தெலுங்கில் கவனம் செலுத்தும் ரகசியம் | இன்று விஜய் மகளுக்கு பிறந்தநாள்: எங்கே படிக்கிறார் தெரியுமா? |
தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். ஒருபக்கம் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானாலும் அதிலிருந்த போராடி மீண்ட ரவீணா, தற்போதும் படங்களில் தொடர்பு நடித்து வருகிறார். தற்போது கேஜிஎப் 2 படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டும் விதமாக ராமிகா சென் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்விராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது ஜன கண மன படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மம்தா மோகன்தாசும் அவருடன் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வில் நடிகை ரவீனா டாண்டனை சந்தித்த மம்தா மோகன்தாஸ் ஒரு ரசிகையாக மாறிப்போய் அவருடன் சந்தோசமாக உரையாடியதுடன் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.