தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் ' பிளாக் மெயில்'. மு.மாறன் இயக்கி உள்ளார். தேஜு அஸ்வின் நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். இப்படம் இந்தவாரம் செப்டம்பர் 12ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்காக ஜி.வி.பிரகாஷ் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு பேட்டியில் தனுஷ் படங்களுக்கு இசையமைக்கிறீர்கள். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதா என கேள்வி எழுப்பட்டது . அதற்கு ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது, " ராயன் படத்தில் ஒரு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார். ஆனால் அது அவரை முதுகில் குத்தும் கதாபாத்திரம் என்பதால் நண்பர் உடன் அப்படி எப்படி நடிக்க முடியும் என வேண்டாம் கூறினேன். இதற்கு நேரடியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிடலாம். எதிர்காலத்தில் இணைந்து நடிக்கலாம்" என தெரிவித்ததாக கூறியுள்ளார்.