கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு |
தென்னிந்தியப் படங்களின் தாக்கத்தால் ஹிந்திப் படங்களின் வசூல் கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023ம் வருடத்தில் தனது மூன்று படங்களான 'பதான், ஜவான், டங்கி' ஆகியவற்றின் மூலம் மட்டுமே 2500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தார் ஷாரூக்கான். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. 'பதான், ஜவான்' இரண்டும் ஆக்ஷன் படங்களாக இருந்தாலும் 'டங்கி' படம் உணர்வுபூர்வமான படமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான ஹிந்திப் படங்களுக்கான பல்வேறு விருதுகள் வழங்குவது ஆரம்பமாகியுள்ளது. 69வது பிலிம்பேர் விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு ஞாயிறன்று குஜராத்தில் உள்ள கிப்ட் சிட்டி என்ற இடத்தில் நடைபெற்றது. விழாவில் பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விருதுகளில் ஷாரூக்கான் நடித்த படங்களுக்கு அதிகமான விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. சிறந்த படமாக '12-த் பெயில்' படமும், சிறந்த நடிகராக 'அனிமல்' படத்திற்காக ரன்பீர் கபூர், சிறந்த நடிகையாக 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்திற்காக ஆலியா பட், சிறந்த இயக்குனராக '12-த் பெயில்' படத்திற்காக விது வினோத் சோப்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் படங்களைப் பொருத்தவரையில் 'டங்கி' படத்தில் சிறந்த துணை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விக்கி கவுஷல், 'பதான்' படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகி விருது ஷில்பா ராவ், சிறந்த சண்டைக்கான விருது 'ஜவான்' படத்திற்காக, சிறந்த விஎப்எக்ஸ் விருது 'ஜவான்' படத்திற்காக வழங்கப்பட்டது.
இது ஷாரூக் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பழைய பெருமையை மீட்ட ஷாரூக்கிற்கும் அவரது படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தகுந்த விருதுகள் வழங்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் ஷாரூக் நடித்து வெளிவந்த 'ஜவான்' படம்தான் கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.