பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

தென்னிந்தியாளவில் நம்பர் ஒன் நடிகை ஸ்தானத்தில் இருக்கும் நயன்தாரா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவர்களது திருமண நிகழ்வு குறித்த டாக்குமென்ட்ரி படம் சமீபத்தில் சில சர்ச்சைகளுடன் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தாய் ஓமனா உள்ளிட்டோரின் பேட்டிகளும் அடங்கி உள்ளன. தன் மகள் பற்றி, குறிப்பாக அவர் பிரபலமான ஒரு நடிகருடன் காதல் வலையில் சிக்கி இருந்த நிகழ்வு பற்றி இந்த டாக்குமென்டரியில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஓமனா.
இது குறித்து அவர் கூறும்போது, “என் வீட்டிற்கு அருகில் தான் செட்டிக்குளங்கரா பகவதி கோவில் இருக்கிறது. நான் சர்ச்சுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாள் காலையும் அந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த சமயத்தில் ஒரு கட்டத்தில் நான் என் மகளை இழந்து விட்டேன் என்றே நினைத்தேன். ரொம்பவே வருத்தமாக இருந்தேன். என் மகளை எனக்கு திருப்பிக் கொடு வேறு எதுவும் தேவையில்லை என்று தேவியிடம் முறையிட்டேன். என் மகளைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவளுக்கு எந்தவிதமான கெடுதலும் நடந்து விடாது என்றும் எனக்கு தெரியும். அந்த வகையில்அந்த தேவி தான் என் மகளை எனக்கு மீட்டுக் கொடுத்தாள். அதோடு மகன் போன்ற ஒரு நல்ல மருமகனையும் எங்களுக்கு கொடுத்தாள்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.