இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையிலுள்ள சல்மான்கானின் கேலக்ஸி வீட்டின் முன்பு ரசிகர்கள் பதாகைகளுடன் பெரிய அளவில் கூடியுள்ளனர். அப்போது சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் இணைந்து தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு கூடிநின்ற ரசிகர்களுக்குகிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே சல்மான்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்பட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் சல்மான்கான்.