ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இந்தியா முழுக்கவே எதிர்பார்க்கப்படும் வெப் தொடர் ஆர் யா பார். தற்போது வெளியாகி உள்ள அதன் டீசர் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. அழகான தீவில் வெளிஉலக தொடர்புகள் இன்றி இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள் பழங்குடியின மக்கள். அவர்களின் காட்டில் கிடைக்கும் அபூர்வ கிரானைட் கல்லிற்காக அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க திட்டமிடுகிறது கார்பரேட் நிறுவனங்கள். தன் மக்களை காப்பாற்ற போராடுகிறான் பழங்குடி இன இளைஞன் ஆதித்யா ராவல். அது தோல்வியில் முடியும்போது வில் வித்தையில் கைதேர்ந்த அவர் நகருக்குள் புகுந்து என்ன செய்கிறான் என்பதுதான் கதை.
இதனை ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் வருகிற 30ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.