கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இரண்டு எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் விஜே பார்வதி. ஜி தமிழ் டிவியின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சர்வைவர் ரியாலிட்டி ஷோ கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இதுவரை இரண்டு எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே பார்வதியின் செயல்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் மரம் வெட்ட சென்ற இடத்தில் அம்ஜத்துடன் சண்டையிட்டடார். ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்து கேமரா வரும்போது மட்டும் நீங்க வேலை செய்றீங்களா? என்று வம்பிழுத்தார். ஒரு சமயத்தில் பார்வதி கீழே விழ நான் கீழே விழும்போது சிரிப்பீங்களா என்று மீண்டும் ஸ்ருஷ்டி டாங்கேவிடம் பஞ்சாயத்தை கூட்டினார். தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கிலும் தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதாது தலைவராக இருக்க ஒரு அணியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என திடீர் தீடீரென ட்விஸ்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜே பார்வதியை விமர்சித்து வருகின்றனர். மேலும் சர்வைவர் டீமில் பார்வதி தான் அடுத்த வனிதா என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.




