அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தீபிகா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் அதிகமானது. இந்த பிரச்னை கடந்த 3 மாதங்களாகவே இருந்து வருகிறது. நானும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தேன். ஆனால் சரியாகவில்லை. தொலைக்காட்சி நிறுவனமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் எனக்கு மிகவும் சப்போர்டிவாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் எனக்கு ட்ரீட்மெண்ட் முடியாததால் நான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.
தற்போது தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி நடித்து வருகிறார்.