ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
விறுவிறுப்பான ரோஜா தொடரில், செய்யாத குற்றத்தில் ரோஜாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. சிறையில் அவருக்கு நிகழவிருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் தனது மனைவியை காப்பாற்ற யாருமே எதிர்பாரத காரியம் ஒன்றை செய்கிறார்.
ரோஜா சீரியலில், அனுவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரோஜா கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் ஆஜராகும் டைகர் மாணிக்கம் ரோஜாவிற்கு ஜாமீன் கிடைக்க கூடாதென வாதிட்டு வெற்றி பெறுகிறார். மேலும், சாக்ஷி மூலம் ரோஜாவை சிறையில் வைத்தே கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜுன் தன் மனைவியை காப்பாற்ற டைகர் மாணிக்கத்தின் சட்டையை கோர்ட்டில் வைத்து நீதிபதி முன்பே பிடிக்கிறார். இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு நாள் சிறைக்காவல் அளிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் அர்ஜூன் அருகில் வேறு சிறையில் தன் மனைவியை எப்படி காப்பாற்ற போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.