ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சவுந்தர்யா நந்தகுமார். விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், பின்னர் திரைப்படங்களிலும் பாடினார். சின்னத்திரை தொடர்களிலும், கபாலி, மாஸ்டர், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதுதவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சவுந்தர்யா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடருகின்றனர். இந்நிலையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இவருக்கு ஆபாசமாகவும், கீழ்த்திரமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சவுந்தர்யா, சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்ட்ராகிராமிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இந்த தகவல்களை சவுந்தர்யா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த நபரை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அந்த நபர் உருவாக்கக்கூடிய அனைத்து கணக்குகளையும் பிளாக் செய்து, "இந்த விருப்பத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.