மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
மாடல் அழகி சம்யுக்தா, ராதிகா தயாரித்து நடித்த சந்திரகுமாரி தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்திலும் நடிகை சம்யுக்தா நடித்துள்ளார்.
சமீபத்தில் ராஜா ராணி பாரதி கண்ணம்மா சங்கமத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் இணைந்துள்ளார். இந்த தொடரில் அவர் சில எபிசோட்கள் வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
அம்மன் ஒரு பக்தி தொடர். இதில் பவித்ரா கவுடா மற்றும் அமல்ஜித் ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நந்திதா ஜெனிபர், அனு சுலாஷ், அவினாஷ் அசோக் மற்றும் ஷாலி அவினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பிரியன் இயக்கி வந்த இந்த தொடரை இப்போது பரமேஸ்வரன் இயக்குகிறார். ஜனவரி மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.