பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகி, காதலில் விழுந்தேன் படம் மூலம் தனி ஹீரோவாக மாறியவர் நகுல். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், தற்போது, செய் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நவ., 23-ல் படம் வெளியாகிறது.
சமீபகாலமாக, சினிமா நடிகர்கள் சின்னத்திரைக்கு (தொலைக்காட்சி) வருவது அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் கமல், விஷால், வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் ஆகியோரை தொடர்ந்து நகுலும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு வித்தியாசமான, ரசிகர்களை கவரும் நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் கலர்ஸ் தமிழ், ரியாலிட்டி ஷோக்களையும் வழங்கி வருகிறது. நடனத்தை மையமாக வைத்து டான்ஸ் Vs டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
இதில் நடுவராக நகுல் பங்கேற்கிறார். நகுல் நன்றாக நடனமாடக்கூடியவர். ஆகையால், நிகழ்ச்சியின் நடுவராக மட்டுமல்லாது போட்டியாளர்களுக்கு நடனம் சம்பந்தமான டிப்ஸ் மற்றும் அவர்களுடன் இணைந்து ஆடவும் உள்ளார்.
நகுல் உடன் மேலும் இரண்டு பேர் நடுவர்களாக இணைய உள்ளனர். ஒருவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, மற்றொருவர் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சி துவங்கும் சமயத்தில் அவர் யார் என்பதை அறிவிக்க உள்ளார்கள்.
நவ., 24 முதல் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை வைகோம் 18 நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.