ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், "நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த காவல் துறையின் உடை அணிந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுது" என பேசியிருக்கிறார்.