'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஜீ தமிழ் தொலைக்காட்சி ஏற்கெனவே குழந்தைகள் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் சுட்டி சாம்பியன்ஸ் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. வருகிற மார்ச் 5ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை படவா கோபியுடன் இணைந்து நந்தினி தொகுத்து வழங்குகிறார்.
இது குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடிலும் 3 குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படும். குழந்தைக்கும் பெற்றோருக்குமான இணக்கத்தை, அன்பை வெளிப்படுத்தும் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதில் தேர்வாகி இறுதி சுற்று வரை செல்லலாம், இறுதி சுற்றில் சுட்டி சாமபியன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.