மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி, அம்மா டான்சர். அப்பா கப்பல் கேப்டன். சினிமாவில் பூர்ணிதா என்ற பெயரில் அறிமுகமானா£ர். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஹீரோயினியாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் கல்யாணி என்ற தனது இயற்பெயரிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்தார். அண்ணாலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், தொடர்களில் நடித்தார். பீச் கேர்ள் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். இது 350 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வாழ்ந்த அவர்கள் கடந்த மாதம் பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார்கள். அங்கிருந்து வந்து ஆண்டாள் அழகர் தொடரில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் கணவருடன் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். கன்னட தொடர்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் கல்யாணி.