சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தி சீரியல்களில் இருந்து தமிழுக்கு வந்தவர் லீமா வோரா. இங்கு வைதேகி சீரியல் மூலம் புகழ்பெற்றார். இவர் தற்போது புதுயுகம் சேனலில் ஒளிபரப்பாகும் இன்று போய் நாளை வா என்ற காமெடி தொடரில் எமதர்மராஜனின் மனைவியாக நடிக்கிறார்.
மனிதர்களை உயிரை எடுக்க முன்பு எமதர்மன் எருமை வாகனத்தில் பாசக்கயிற்றோடு வருவார். இப்போது காலம் மாறிவிட்டதால் யார் உயிரை எடுக்க வேண்டுமோ அவர்களுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு உயிரை எடுக்க முயற்சிப்பதும். அவரை டபாய்த்து மக்கள் தப்பிப்பதும்தான் கதை.
இடையில் எமதர்மராஜனுக்கு குடும்ப டார்ச்சர். அவரது மனைவி வரும்போது அரிசி வாங்கிட்டு வாங்க, பருப்பு வாங்கிட்டு வாங்கன்னு எமலோகத்திலிருந்து போனில் டார்ச்சர் செய்கிறார். மனைவியை சமாளித்து எமதர்மராஜன் தன் கடமையை எப்படி செய்கிறார் என்கிற காமெடி கதை.