சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திரைப்படம் தொடர்பான பொது விழாக்களை தொகுத்து வழங்குவதில் முன்னணில் இருப்பவர்கள் டிடி என்கிற திவ்யதர்ஷினியும், ரம்யாவும். இவர்களின் சம்பளமும் பெரியது. திவ்யதர்ஷினி திருமணத்துக்கு பிறகு வெளி நிகழ்ச்சிகளை பெரிதும் குறைத்துக் கொண்டார். விஜய் டி.வி. தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்குகிறார். ரம்யாவும் திருமணத்திற்கு பிறகு நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டார். திருமண வாழ்க்கை கசந்து கணவரை பிரிந்து விட்டதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அதையே பலரும் கேட்பதால் குறைத்துக் கொண்டதாக கூறுகிறார்கள். அதோடு தற்போது சினிமாவில் நடிப்பு, நடனம், ரேடியோ ஜாக்கி என வேறு தளங்களில் பிசியாகி விட்டார்.
அதனால் இந்த இடத்தை இப்போது அஞ்சனா பிடித்துக் கொண்டார். மியூசிக் சேனல் தொகுப்பாளினியாக இருந்து பொது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனவர். தற்போது அதிகமான சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வசதியாக திரைப்படம் தொடர்பான புத்தகங்களை தொடர்ந்து படித்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன் நிகழ்ச்சி வருகிறவர்களை பற்றிய நிறைய குறிப்புகளுடன் மேடையேறுகிறார். விரைவிலேயே ரம்யா மற்றம் டிடி இடத்தை அஞ்சனா பிடித்து விடுவார் என்கிறார்கள்.