பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தென்றல், வேட்டை, தியாகம், உயிரின் நிறம் ஊதா என பல தொடர்களில் நடித்தவர் சூசன். முன்னதாக ஜெயா டிவியில் தொகுப்பாளினியாக இருந்த இவர், மைனா படத்தில் அதிரடியான வில்லியாகவும் நடித்தார். அதன்பிறகும் சில படங்களில் நடித்தவர், சமீபகாலமாக சின்னத்திரையிலேயே முழுநேர நடிகையாகியிருக்கிறார். ஆனால் பல தொடர்களில் நடித்து விட்டபோதும் சூசன் என்று சொன்னாலே முதலில் கண்முன் வந்து நிற்பது தென்றல் சீரியல்தான். அதில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாகவும் நடித்திருந்தார். அதுவே குறுகிய காலத்தில் சின்னத்திரையில் சூசனை பெரிய நடிகையாக்கியிருக்கிறது.
இந்தநிலையில், தற்போது ஏழாம் உயிர் என்ற பெயரில் வேந்தர் டிவியில் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார் சூசன். மாதம் ஒரு கதை என இந்த தொடரின் கதையோட்டம் இருந்தபோதும் சூசன் நடிக்கிற பேய் கேரக்டர் எல்லா கதைகளிலும் வருமாம். மேலும், ஏற்கனவே தென்றல் தொடரில் மேக்கப் இல்லாமல் நடித்த சூசனுக்கு இந்த தொடரிலும் மேக்கப் கிடையாதாம். நிஜ தோற்றத்திலேயே தோன்றி அச்சுறுத்துகிறாராம். இந்த தொடரை சரவணன் மீனாட்சி தொடரை இயக்கிய அழகர் இயக்கி வருகிறார். பாரதிமோகன் உள்பட பல சின்னத்திரை பிரபலங்கள் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்கள்.




