சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சின்னத்திரையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் சுசித்ரா. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவது மாதிரி சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 2005ம் ஆண்டு குழந்தைகளுக்கான தனி சேனலில் அறிமுகமானார். குழந்தைகள் நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்தார். ஆதி படத்தில் த்ரிஷாவின் சின்ன வயது தோற்றத்தில் நடித்தார். தொடர்ந்து அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் படங்களில் நடித்தார்.
தற்போது லிங்கா படத்தில் சோனாக்ஷி சின்ஹாவின் தோழியாக நடித்தார். அடுத்து காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்து வருகிறார். என்றாலும் சினிமா வாய்ப்புகளை குறைத்து சின்னத்திரை வாய்ப்புகளையே அதிகரித்து கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரைதான் என் உலகம். அங்குதான் வளர்ந்தேன். குழந்தை நிகழ்ச்சிக்கு வந்து அதன் பிறகு தொகுப்பாளினியாகி, சரவணனன் மீனாட்சி, தாயுமானவன் தொடர்களில் நடித்தேன். அவ்வப்போது சினிமாவிலும் நடிக்கிறேன். என்றாலும் எனக்கு கேம் ஷோக்களை தொகுத்து வழங்கத்தான் பிடித்திருக்கிறது. எந்த காலத்திலும் சின்னத்திரையை விட்டு விலகி நிற்க மாட்டேன். என்கிறார் சுசித்ரா.