டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |
இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் 1965ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பாக்கியுடன் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் அழைத்தனர். இவர் பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற பட்டமும் உண்டு. அந்தக்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு ஜூன் 3ம்தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகத்தான் இருக்கிறது.
மறைந்த நட்சத்திரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பழைய திரைப்படங்கள், முன்னாள் நாயகர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வரும் விஜய் டி.வி., ஜெய்சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வருகிற ஜூலை 15ம்தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் செய்து வருகிறார். நிகழ்ச்சியின்போது ஜெய்சங்கருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜெய்சங்கரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் சஞ்சய் சங்கர்.