பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் | நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய் | சூர்யா பரிசாக கொடுத்த கார் விலை தெரியுமா? | ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ | அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல் | முதல் வார இறுதியில் 20 கோடி வசூலித்த 'பிளாஸ்ட்' | பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார் | கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல் |

தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் நிலையில், இவர்களின் நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து, அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூலை 22ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கலில், பலரும் போட்டியிட மனு சமர்பித்தனர். தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், பதினான்கு கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர். 23 பதவிகளுக்கு மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று (ஆக.,10) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. சுமார் 2,000 உறுப்பினர்கள் ஓட்டளிக்கின்றனர். பெப்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் உமா சங்கர் பாபு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.




