கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
‛நாதஸ்வரம்' தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரீருத்திகா. தொடர்ந்து சீரியல்களில் நடித்து தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக மகராசி தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர், அந்த தொடரில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீருத்திகா மற்றும் ஆர்யன் என இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஸ்ரீருத்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சின்னத்திரை பிரபலங்கள் அசார், அஸ்வத், ஸ்ருதிராஜ், நேஹா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து பல ரசிகர்களும் ஸ்ரீருத்திகா - ஆர்யன் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.