செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிறது. ஆனால், இதுவரை அந்த பரிசை முழுமையாக அனுபவித்தவர் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9 ல் வெற்றி பெற்ற அருணா, ஒரு பேட்டியில் பேசிய போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டும். எனவே, சிறிது சிறிதாக நாங்கள் அந்த பணத்தை கட்டி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.