'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரம் முதல் குழந்தை வரை அனைவருக்கும் தனித்துவமான இடமிருந்தது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது 'எதிர்நீச்சல் சீசன் 2' விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் பல நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் குழந்தை தாராவும் ஒருவர்.
இந்நிலையில், குழந்தை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், 'என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள். நான் அழுதும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்' என செல்லமாக புகார் செய்துள்ளார்.