ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சுற்றுலாவை முடித்து கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இனியா தொடர் முடிந்த பின் குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா சென்ற அவர், கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து அவரிடமே கேள்விகள் கேட்டு வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டானதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தான் கமிட்டான சீரியல் எந்த சேனல் மற்றும் எந்த ஸ்லாட் போன்ற விவரங்களை ரசிகர்களையே யூகிக்க சொல்லியிருக்கிறார். இதனால் ஆல்யாவின் ரசிகர்கள் அவரது புதிய சீரியல் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.