லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் இயக்கி வருபவர் பாரதிராஜா. அவர் இயக்கிய சில படங்களுக்குக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். அதில் சிவாஜிகணேசன்-ராதா நடித்த முதல் மரியாதையும் ஒன்று. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா- இளையராஜா-வைரமுத்து கூட்டணி கொடிகட்டிப்பறந்த பொற்காலம் அது.
அந்த பாரதிராஜா தற்போது அன்னக்கொடி என்றொரு படத்தை இயக்கியிருந்தபோதும், அதற்கு முன்பு தெற்கத்தி பொண்ணு என்றொரு தொடரை கலைஞர் டி.விக்காக இயக்கி வந்தவர், இப்போது முதல்மரியாதை என்ற பெயரிலேயே ஒரு நெடுந்தொடரை இயக்கப்போகிறாராம். குடும்ப உறவுகள் பற்றிய செண்டிமென்டான தொடர் என்பதால், இதற்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். பாரதிராஜா செய்யப்போகும் இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.