ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
சின்னத்திரையில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பாபூஸ். பல வருடமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது சின்னத்திரை தான். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'ஜோசியர் ஒருவர் ஒரு பெண்ணால் என் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைக்கும். செருப்பால் அடித்தால் கூட சினிமாவை விட்டு நான் போகமாட்டேன். சினிமாவில் நான் ஒரு அடையாளம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 'செல்வி' சீரியல் தான் எனக்கு பெயர் புகழை கொடுத்தது.
செல்வி சீரியல் நடிக்கும் போது என் வயது 42. அதை இயக்கி தயாரித்து நடித்தது ராதிகா. அன்று மட்டும் அந்த ஜோசியரை நான் பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன்' என அந்த பேட்டியில் பாபூஸ் கூறியுள்ளார். செல்வி தொடருக்கு பின் மிகவும் பிரபலமான பாபூஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்து வருகிறது.