ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
சிறகடிக்க ஆசை தொடரில் விஜயா கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருபவர் அணிலா. இந்த தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் அணிலா, விஜயா கதாபாத்திரத்தால் தனக்கு நேரும் கஷ்டங்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
'மீனாவை கொடுமைப்படுத்துவதாக சொல்லி, பார்க்கும் இடத்தில் எல்லாம் திட்டுகிறார்கள். இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் நான் எந்த பதிவு போட்டாலும் மோசமாக கமெண்ட் செய்கிறார்கள். ஏர்போர்ட்டில் வைத்து என்னை பார்த்தால் கூட என்னை விஜயாவாக தான் பார்க்கிறார்கள். நான் மலையாளத்தில் எத்தனையோ சீரியல் நடித்திருக்கிறேன். ஆனாலும், சிறகடிக்க ஆசை தொடர் தான் என்னை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிரபலபடுத்தியுள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.