கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' |
கேரளாவை சேர்ந்த அணிலா ஸ்ரீகுமார் தமிழில் முதன்முதலில் நடிக்க வரும்போது பலரும் நெகட்டிவாக பேசியிருந்தார்களாம். ஆனால், அதையெல்லாம் தகர்த்து அணிலாவின் நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியிலும் ஒரு சீரியல் நடித்து வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் பேசிய அணிலா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனது ஏக்கத்தை சொல்லியிருந்தார். மேலும், மாதத்திற்கு 30 நாட்கள் தான் இன்னும் 10 நாட்கள் இருந்தால் இன்னொரு சீரியல் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறும் வகையில் புதிய சீரியலில் அதுவும் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் 'பவித்ரம்' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது ஆசைப்படியே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அணிலா நடிகையாகிவிட்டார். அதேசமயம் இந்த மூன்று சீரியல்களில் ஏதாவது ஒன்றிலிருந்து விலகுவீர்களா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டிருந்த நிலையில், கண்டிப்பாக மூன்று சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.