வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி பிரியா விலகுவதாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.