தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! |
சின்னத்திரை நடிகை ஸ்வாதி கொன்டே 'ஈரமான ரோஜாவே-2' சீரியலின் மூலம் தமிழ் நேயர்களுக்கு பரிட்சயமானார். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், வெப்சீரிஸ், குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'மூன்று முடிச்சு' தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்வாதி, தமிழ் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார். தற்போது இவர் சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். புதிதாக வாங்கிய காரை அப்பா அம்மாவுடன் சேர்ந்து டெலிவெரி எடுத்து மகிழ்ந்துள்ளார்.