பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியுள்ளது. ரியாஸ்கான் மீது புதிதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி 'சின்னத்திரையிலும் பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரங்களும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக' கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதை போல சின்னத்திரையிலும் அதிகமாக உள்ளது. இதனால் பல நடிகைகள் தற்கொலைக்கு முயன்று உள்ளார்கள். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. துறை போன்று சினிமாவும் ஒரு தொழில்தான். இதனை ஏன் உடல் வியாபாரமாக மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இது மிகவும் தவறானது.
தமிழ் டிவி சீரியல்களில் நடிகைகளிடமிருந்து இயக்குனர்களும் டெக்னீஷியன்களும் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. அதேபோல், சில பெண்கள் நன்றாக சம்பாதிப்பதால் துன்புறுத்தலை பொறுத்துக் கொள்கிறார்கள். அதையும் மீறினால் நடிகைகளுக்கு தடை செய்யப்படும் சம்பவமும் நிகழ்கிறது.
சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார். ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டை கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் எப்படி கொடுப்பது. வேண்டும் என்றால், சிபிஐ மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்.
குழந்தையாக நடிக்கும்போது கூட பாலியல் தொல்லை தருகிறார்கள். நான் குழந்தையாக நடிக்கும்போது இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டேன். என் அம்மாவிடம் சொல்லி இந்த பிரச்னையை எழுப்பியபோது 75 சதவீதம் முடிந்த இந்தி படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.