2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான அக்ஷிதா போபைய்யா, ‛நந்தினி, கண்ணான கண்ணே' ஆகிய தொடர்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‛தமிழும் சரஸ்வதியும்' தொடரிலும் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா, அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், அண்மையில் இவருக்கு ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. தற்போது சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருக்கும் அக்ஷிதா, இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமான கவர்ச்சியுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு ஒருபுறம் லைக்ஸ் குவிந்தாலும் மற்றொருபுறம் கல்யாண பொண்ணு இப்படி பண்ணலாமா? என அட்வைஸ்களும் கிடைத்து வருகிறது.