சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சின்னத்திரை மற்றும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார். அதில் அவர், ‛‛நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னை தாக்கியதில் குழந்தை வெளியே வந்துவிட்டது. அதை பார்த்த என் கணவர் ஓடி விட்டார்.
பிறகு நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கே நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். ஏற்கனவே என் முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, ராகுலை காப்பாற்ற போராடினேன். 9 மாதங்கள் இங்குபேட்டரில் இருந்தான். அவனுக்காக செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க தான் நான் என் பெற்றோருடனேயே வந்து தங்கிவிட்டேன். என்னை போல் வாழ்க்கையில் எதையும் சிரித்துக்கொண்டே தைரியமாக எதிர் கொள்பவர்கள் அனைவரது பின்னாலும் ஒரு சோகக்கதை இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்,'' என்றும் அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.