ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மாளிகைப்புரம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த 'தேவ நந்தா' என்கிற சிறுமி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்று பிரபலமானார். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 படத்திலும் தமன்னாவின் மகளாக நடித்திருந்தவர் இவர்தான். இதைத்தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்துள்ள 'கு' என்கிற ஒரு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது வீட்டில் இருந்தபடி தனது யூடியூப் சேனலுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் தேவ நந்தா. ஆனால் சோசியல் மீடியாவில் உள்ள ஒரு சிலர் அந்த பேட்டியில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் பதிவிறக்கம் செய்து தேவ நந்தாவை கிண்டலடிக்கும் விதமாக வேறு சில விஷயங்களை அந்த வீடியோவுடன் இணைத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இவர்களது செயல் தனது மகளின் மனதை நோகடிக்கும் விதமாக இருப்பதாகவும் தங்களது அனுமதியின்றி தனது மகளின் வீடியோவை இவ்வாறு தவறாக பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசாரில் தேவ நந்தாவின் தந்தை தனது மகள் மூலமாக புகார் அளித்துள்ளார்.