சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், வெளியே அவருக்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதீப்பின் ஆதரவாளர்கள் வனிதா விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனிதாவும் பிரதீப்பும் பேசிக்கொண்டு சமாதானம் ஆகிவிட்ட வாட்சப் உரையாடலும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு தன்னால் அனுதாபம் காட்ட முடியவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'அடித்தவர் யாரோ அதற்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யு-டியூப்புக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானல் கண்டண்டாக பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா?. நான் இதற்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், சனியன் இந்த நேரம் பார்த்து மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும் அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றிவளைத்தது ஞாபகம் வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பது அப்போது ஞாபகத்து வரவில்லையா? உங்களுக்கென்று இல்லை யாருக்குமே வன்முறை நடக்கக்கூடாது ' என்று பதிவிட்டுள்ளார்.