ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிக்பாஸ் வீட்டில் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதுமுதலே சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு குரல்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் என்று கூறி சிலர் வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் வனிதாவின் முகத்தில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாட்சப்பில் உரையாடிக்கொண்ட பிரதீப் ஆண்டனி வனிதாவிடம் வருத்தம் தெரிவிக்க, வனிதாவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த வாட்சப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ‛‛என் மனம் நிலையாக இல்லை. நான் உங்கள் மகளுக்கு எதிரானவர் அல்ல. ரெட் கார்டு விஷயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. இப்போது அதுபற்றி பேசுவது பாதுகாப்பு இல்லை. ஷோ முடியட்டும் பிறகு பேசுகிறேன்'' என்று பிரதீப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வனிதா, ‛‛எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு வருந்துகிறேன். உங்கள் நண்பராக உங்களிடம் பேச வேண்டும். உங்களுக்கு நான் இருக்கிறேன்.
மேலும், ‛‛பிக்பாஸில் எந்த போட்டியாளர்களுக்கும் எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ நான் இல்லை. நான் இப்படித்தான் அவர்களுடன் பேசுகிறேன். வனிதா விஜயகுமார் உங்களுக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஓய்வு எடுங்கள். ஜோவிகா மிகவும் புத்திசாலி. அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை,'' என கூறி உள்ளார் பிரதீப்.