காவாலா பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை ; தமன்னா வருத்தம் | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் என்ட்ரி கொடுக்கும் சாய் ரித்து | மாற்றி மாற்றி பேசும் கோபி : கடுப்பான ரசிகர்கள் | ஆர்மி என்கிற பெயரை பயன்படுத்தியதால் அல்லு அர்ஜுன் மீது புகார் | உலக சினிமாவில் ஒரே நபர் என்கிற சாதனையை இழந்து விட்டாரே விஜய் ; ரசிகர்கள் வருத்தம் | ஜோவிதாவை நடிகையாக்க நினைக்கல - வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக் | மீண்டும் களமிறங்கும் சிபு சூரியன் | அன்னம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | சினிமாவில் ஓய்வை அறிவித்த '12வது பெயில்' நடிகர் விக்ராந்த் மாசே | 'புஷ்பா 2'க்கு வழி விட்ட தமிழ்ப் படங்கள் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதாவின் மூத்த மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதவிர தனியார் ஊடகங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் 'ரெட் கார்டு கொடுக்குறீங்களா' என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக வனிதா அப்பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரதீப்புக்கு எதிராக தனது கருத்துகளை வனிதா சமூக வலைதளங்களில் முன்வைத்து வந்தார். இதனால் அவரது ஆதரவாளர் வனிதாவை தாக்கி இருக்க கூடும் என்கின்றனர்.