அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சின்னத்திரையின் நம்பர் 1 தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிய டிடி என்கிற திவ்ய தர்ஷினி, சமீபகாலமாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் கால்மூட்டில் ஏற்பட்ட பிரச்னை அதை தொடர்ந்து நடைபெற்ற அறுவைசிகிச்சை காரணமாக டிடியால் நீண்டநேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எனவே, தான் முன்பு போல அவர் சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அவரது ரசிகர்களுக்கு டிடியின் மீதுள்ள அன்பும், பரிவும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், அண்மை காலங்களில் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேட்டியளித்து வரும் டிடி, தனக்கு நடைபெற்ற மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஒருமுறை டிடியின் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஹீரோயின், டிடியின் உடையை போலவே அணிந்திருந்தாராம். இதனால் அப்செட்டான அந்த நடிகை, உனக்கெல்லாம் இந்த உடையா? என்பது போல் டிடியை எளக்காரமாக பார்த்துவிட்டு, டிடியிடம் வேறு டிரெஸ் இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். இதனால் டிடி மிகவும் மனம் வருத்தமடைந்தாலும், அந்த நிகழ்ச்சி முழுவதிலுமே அந்த நடிகையை மிகவும் மரியாதையுடன் நடத்தி பேட்டி எடுத்திருக்கிறார். இந்த செய்தியானது தற்போது வெளியில் கசிய, டிடியின் இந்த பெருந்தன்மையான குணத்தை பலரும் பாராட்டி சீக்கிரமாகவே பூரண உடல்நலத்துடன் டிடி கம்பேக் கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.