30 ஆண்டுகளை நிறைவு செய்து 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா |
தென்னிந்திய மொழிகளில் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா ராம். தமிழில் நந்தினி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். திருமணத்திற்கு பின் திரைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ரசிகர்களும் நித்யாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவிப்பதுடன், அவரை கம்பேக் கொடுக்க சொல்லி கெஞ்சி வந்தனர். சிறிய இடைவேளைக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்துள்ள நித்யா, சுடிதாரில் ஹோம்லியான லுக்கில் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் நித்யாவின் கியூட்னஸை வர்ணிக்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் ஹார்டினை பறக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.