'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் மற்றும் ரித்திகா செல்வி ஆகியோர் நடிக்கின்றனர். 'அண்ணா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும், நந்தினி தொடருக்கு பின் நித்யா ராம் மீண்டும் தமிழில் நடிக்க வருவதால் அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங்கானது கடந்த 10ம் தேதி, முருகன் கோயில் ஒன்றின் வாசலில் வைத்து பூஜையுடன் தொடங்கியுள்ளது. மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் ஒன்றாக சேர்ந்து க்ளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளனர். 'அண்ணா' சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.