ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரையில் ‛வானத்தை போல' சீரியல் பரபரப்பான பல டுவிஸ்ட்டுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும், ஸ்ரீகுமார் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார். தற்போது அந்த தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் சாந்தினி, ஹீரோ ஸ்ரீகுமார் மூஞ்சில் உண்மையாகவே எச்சில் துப்பியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, அந்த தொடரின் ஒரு காட்சியை மகாநதி சங்கர், ஹீரோவை அவமானப்படுத்தி எச்சில் துப்புவது போல வடிவமைத்துள்ளனர். அந்த காட்சிக்காக சோப்பு நுரை போடலாம் என்று கூட சீரியல் குழுவினர் யோசித்துள்ளனர். ஆனால், ஸ்ரீகுமாரோ நடிப்பு தான் எனக்கு எல்லாமே அதற்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவேன் என்று கூறி உண்மையிலேயே எச்சில் துப்ப கூறியுள்ளார். மகாநதி சங்கர் இதற்கு முடியவே முடியாது என்று மறுத்துவிட, ஸ்ரீகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் சாந்தினியை பேசி சம்மதிக்க வைத்து எச்சில் துப்ப சொல்லியுள்ளனர். அதன்பின் அதை எடிட்டிங்கில் மகாநதி சங்கர் செய்தது போல் மாற்றியுள்ளனர்.
இந்த செய்தியானது தற்போது பரவி வர ஸ்ரீகுமாருக்கு நடிப்பின் மீது இவ்வளவு காதலா? என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.