தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
தொழில், சினிமா என கண்ணும் கருத்துமாக இருக்கும் வனிதா விஜயகுமார் தனது மகள்களுக்கு நல்லதொரு தாயாக இருந்து வருகிறார். இப்போதெல்லாம் யாரிடமும் சண்டை போடமால் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் மகள்கள் மற்றும் மகனுடன் ஒரே குடும்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வனிதா, 'சில நினைவுகள் என்றும் மறையாது. காலம் வேகமாக செல்கிறது, குழந்தைகள் நமக்கு சமமாக வளர்ந்து வருகிறார்கள். எனது மகள்கள் தான் எனக்கு சிறந்த நண்பர்கள். அவர்கள் மனிதர்களுக்குரிய அனைத்து அழகான குணங்களுடன் வளர்கிறார்கள். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்' என பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த தாய்மை குணத்தை பாராட்டும் ரசிகர்கள், வனிதா அவரது மகனுடனும் சீக்கிரமே சேர வேண்டும் என ஆறுதல் சொல்லி வருகின்றனர்.