'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பேராதவரோடு சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. முன்னதாக இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய சில தொடர்களில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், நடிகர் பட்டாளாமே போட்டிப்போட்டு நடிக்கும் எதிர்நீச்சல் தொடரில் திருச்செல்வமும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், ரசிகர்களின் விருப்பப்படியே ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் திருச்செல்வம் என்ட்ரி கொடுக்கிறார். எதிர்நீச்சல் தொடரில் கடந்த சில நாட்களாக யார் ஜீவானந்தம்? என்ற பில்டப்பும் சஸ்பென்ஸும் இருந்து வந்தது. கதையில் முக்கிய திருப்பத்தை கொண்டுவரப்போகும் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக திருச்செல்வமே என்ட்ரி கொடுத்துள்ளார். இனிவரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் - குணசேகரனுக்கு இடையே நடக்கும் மோதலை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.