திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
சின்னத்திரை பிரபலங்கள் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா பஞ்சாயத்து விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. சம்யுக்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஷ்ணுகாந்த் குறித்து உச்சபட்சமாக பாலியன் வன்புணர்வு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்நிலையில், முன்னதாக அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரத்தில் அர்னவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா தற்போது விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து சில உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் தனது பதிவில், 'விஷ்ணுகாந்த் ஒரு ஜெண்டில்மேன். பெண் நடிகைகளிடம் தேவையில்லாமல் பேசமாட்டார். வாழ்க்கை விஷயத்துல விஷ்ணுகாந்த் அவசரப்பட்டு இருக்க வேண்டாம். விஷ்ணுகாந்த் மிடில் க்ளாஸ் பேமிலியில் பிறந்து கஷ்டப்பட்டு முன்ன வந்துருக்காரு. ஆனால், அந்த பொண்ணு ஷூட்டிங் கல்யாணம் மாதிரி, விஷ்ணுகாந்த் கூட நடந்த கல்யாணத்தையும் கேஷுவலா மூவ் பண்ணிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட சம்யுக்தா ரவி கூட தான் பேசுவா. ரவியும் மிடில் க்ளாஸ் பையன் தான். அவனும் பல நடிகைகள் கூட நடிச்சிருக்கான். அப்படி அவன் தப்பா நடந்திருந்தா எல்லோரும் சொல்லிருப்பாங்க. ஆனா, கூட நடிச்ச பெண்களே ரவிக்கு சப்போர்ட் பண்றாங்க. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பசங்கள தேவையில்லாம சம்யுக்தா கஷ்டபடுத்திட்டாளோன்னு தோனுது' என்று கூறியுள்ளார்.
ரிஹானாவின் இந்த பதிவால் விஷ்ணுகாந்த், ரவிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.