நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
விஜய் டிவியில் வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இரு வாரத்திற்கு ஒரு முறை எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரத்தில் கூட நடிகை ஷெரின் வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வாரத்தில் வைல்ட் கார்டு சுற்று நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே வெளியேறிய குக்குகள் மற்றும் புதிதாக ஒரு சிலரும் இணைவார்கள். அதன்படி, இந்த சீசன் வைல்ட் கார்டு சுற்றில் விஜய், தனுஷ் படங்களில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டர் கிரண் கலந்துகொள்கிறார். இவருடன் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கலந்து கொள்கிறார். இப்போது இது குறித்த புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.